தமிழகத்தில் அடுத்தகட்டதளர்வுகள் தொடர்பானஅறிவிப்பு நேற்றுவெளியானது. அதில் 9 முதல்12ஆம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு வரும் 16ஆம்தேதி முதல் பள்ளிகள்திறக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் மாநில அரசுமற்றும் கல்வித்துறை சார்பில்வெளியிடப்பட்டுள்ளநிலையான வழிகாட்டுநெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்னதாக தமிழக அரசுசார்பில் கடந்த செப்டம்பர்மாதம் வழிகாட்டுநெறிமுறைகள்வெளியிடப்பட்டன. அதன்படி,
* பள்ளிகளில் நுழையும் போதுஒவ்வொருவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதனைசெய்ய வேண்டும்.
* வகுப்பறைகளில் தனிமனிதஇடைவெளியைப் பின்பற்றவேண்டும். குறைந்தபட்சம் 6அடி இடைவெளி கடைபிடிக்கவேண்டும். இதற்காகவெவ்வேறு காலஅட்டவணைகள் பின்பற்றப்படவேண்டும்.
* வரிசையில் நிற்க வேண்டியசூழல் ஏற்பட்டால்அப்பகுதிகளில் தரையில்வட்டங்கள் வரைந்திருக்கவேண்டும். அதில்மாணவர்கள் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.
* காலை வழிபாட்டுக் கூட்டம்,மாணவர்கள் கூடுதல்,விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைதவிர்க்கப்பட வேண்டும்.நீச்சல் குளங்கள்மூடப்பட்டிருக்க வேண்டும்.
* பள்ளி ஆய்வகம், வகுப்பறை,பொதுப் பயன்பாட்டுஇடங்களை 1 சதவீதம்சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
* மாணவர்கள்கைகழுவுவதற்கு சோப்பு,சானிடைசர்கள் உள்ளிட்டவைவைத்திருக்க வேண்டும். உரியதண்ணீர் வசதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
* பள்ளிகளில் பயோமெட்ரிக்பதிவேட்டிற்கு பதில் தொடுதல்இல்லாத வகையில் வருகைப்பதிவேடு வைத்திருக்கவேண்டும்.
* மாணவர்கள், ஆசிரியர்கள்,ஊழியர்கள் முகக்கவசம்அணிந்திருக்க வேண்டும்.இதனை பள்ளி தலைமைஆசிரியர் அல்லது முதல்வர்உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளி லிஃப்ட்கள்,படிக்கட்டுகள், கைப்பிடிகள்ஆகியவற்றைத் தொடுவதைக்குறைத்துக் கொள்ளவேண்டும்.
* ஆசிரியர்கள், மாணவர்கள்அனைவரும் கோவிட்-19முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்துஅறிந்திருக்க வேண்டும்.
* மாணவர்கள் தங்களதுநோட்டுப் புத்தகம், பேனா,பென்சில், அழிப்பான்,தண்ணீர் பாட்டில்போன்றவற்றை பகிர்ந்துகொள்ளக் கூடாது