Wednesday, October 31, 2018

விடுமுறையில் கல்லுாரி தேர்வு: கவலையில் மாணவர்கள்

தீபாவளிக்கு முந்தைய நாளான, வரும், 5ம் தேதியும், அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாளில், கல்லுாரிகளில் நடத்தப்பட உள்ள தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டும் என்ற,
கோரிக்கை எழுந்துள்ளது.தீபாவளியான, நவ., ௬ம் தேதி, அரசு விடுமுறை. அதற்கு முதல் நாளான, நவ., 5ம் தேதியும், அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது; அதற்கு பதில், 10ம் தேதி, சனிக்கிழமை, வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, நவ., 5ல், பல கல்லுாரிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, தன்னாட்சி பெற்ற, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளும், இன்ஜி., கல்லுாரிகளும், நவ., 5ல், தேர்வுகள் நடத்துவதால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.'குடும்பத்துடன் ஊருக்கு செல்ல வேண்டிய நிலையில், திங்கள் கிழமை தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேர்வு தள்ளிவைப்புஇந்நிலையில், நவ., 5ம் தேதி நடக்கவிருந்த, சென்னை பல்கலை தேர்வுகள், டிச., 7க்கு, மாற்றப்பட்டுள்ளன.சென்னை பல்கலை பதிவாளர், சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ம் தேதி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நவ., 5ல் நடக்கவிருந்த, சென்னை பல்கலை தேர்வுகள், டிச., 7க்கு மாற்றப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment