Tuesday, January 29, 2019

மின் ஊழியர்களுக்கு வாரியம் எச்சரிக்கை

வேலைக்கு வராமல், 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்றால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, ஊழியர்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பழைய
ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதற்கு, மின் ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து, போராட்டங்களில் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதனால், மற்ற துறைகளுக்கு வழங்கும் ஊதியம், வாரியத்திற்கு பொருந்தாது. இருப்பினும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும்படி, மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த சூழலில், மின் வாரியத்தில் உள்ள சில சங்க ஊழியர்கள், வேலைக்கு வராமல், ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதாக புகார்கள் வருகின்றன. இது, வாரியத்தின் விதிகளுக்கு எதிரானது.இதனால், குறித்த நேரத்தில் வருகை பதிவேட்டை முடித்து, அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்போர்; தாமதமாக அலுவலகம் வருவோர் குறித்த விபரங்களை, தலைமை அலுவலகத்திற்கு தரும்படி, மாவட்ட பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வேலைக்கு வராமல், போராட்டத்தில் பங்கேற்பவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment