Wednesday, February 27, 2019

மாற்று திறனாளி மாணவர்களுக்கு சலுகை யு.ஜி.சி., சுற்றறிக்கை

மாற்று திறனாளி மாணவர்களுக்கு, தேர்வுகளில், ௧ மணி நேரம் வரை, கூடுதல் சலுகை வழங்க வேண்டும்' என, கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பொது தேர்வுகளில்,
மாற்று திறனாளி மாணவர்களில் சில பிரிவினருக்கு மட்டும், கூடுதலாக ௧ மணி நேரம் சலுகை வழங்கப்படுகிறது. கல்லுாரிகளிலும், தேர்வு நேரத்தில், கூடுதல் சலுகை தரப்படுகிறது.இந்நிலையில், நேர சலுகை தொடர்பாக, அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுப்பிஉள்ள புதிய சுற்றறிக்கை:மாற்று திறனாளி மாணவர்களுக்கு, தேர்வில் கூடுதல் நேர சலுகை வழங்கப்படும் என்பதை, ஈடு செய்யும் நேரம் என, மாற்றி வழங்க வேண்டும். இதில், ௧ மணி நேரத்துக்கு, 20 நிமிடங்கள் வீதம், ஈடு செய்யும் நேரத்தை, கூடுதலாக வழங்க வேண்டும். ௩ மணி நேரத்திற்கு தேர்வு நடந்தால், கூடுதலாக, ௧ மணி நேரம் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment