மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குனர் அறிவொளி உட்பட, ஐந்து பேர், 25 கோடி ரூபாய், 'சுருட்டிய' விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை விரிவடைவதால்,
மற்ற கல்வி அதிகாரிகள் பீதியடைந்து உள்ளனர்.சோதனைசென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் செயல்படுகிறது.இதன் இயக்குனர் அறிவொளி. அறிவொளிக்கு அடுத்த நிலையில், தற்போது, முறைசாரா கல்வி இயக்ககத்தின் இயக்குனராக உள்ள, லதா பணியாற்றினார்.அதேபோல, உதவி பேராசிரியை சங்கீதா, காஞ்சிபுரம் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியை சித்ரா, சேலம் மாவட்டம், எஸ்.எஸ்.காட்டுவளவு பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமலன் ஜெரோம் ஆகியோரும் பணியாற்றினர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்த லதா, 'உலகமெல்லாம் தமிழ்' என்ற திட்டத்தின் கணக்குகளை கவனித்து வந்தார்.அந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக, சங்கீதாவும், அமலன் ஜெரோமும் பணியாற்றினர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் வெளியிடப்படும், 'கனவு ஆசிரியர், தேன் சிட்டு' என்ற, மாத இதழ்கள் தயாரித்து வெளியிடும் பொறுப்பை, சித்ரா கவனித்து வந்தார். இவர்கள் ஐந்து பேரும், போலி ரசீது வாயிலாக, 25 கோடி ரூபாய் வரை, 'சுருட்டி' உள்ளனர்.இதுபற்றிய தகவல் அறிந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், சில தினங்களுக்கு முன், அறிவொளி மற்றும் லதா உள்ளிட்ட ஐந்து பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.ரகசிய கண்காணிப்புஇந்நிலையில், 25 கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை விரிவடைந்து உள்ளது.அவர்கள், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மேலும், சில கல்வி அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:லஞ்ச வழக்கில் சிக்கிய, அறிவொளி உள்ளிட்ட ஐந்து பேர் மீது, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்த, சம்மன் அனுப்ப உள்ளோம்.முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்த, மேலும் சில கல்வி அதிகாரிகளை, ரகசியமாக கண்காணித்து வருகிறோம். விரைவில், அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில், சோதனை நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment