Monday, March 25, 2019

சி.பி.எஸ்.இ.,யில் புதிய பாடங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு, குழந்தை பருவ பராமரிப்பு கல்வி மற்றும் யோகா ஆகியவற்றை, பாடத்திட்டத்தில் சேர்க்க,சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.புதிய
பாடத்திட்டங்களை சேர்ப்பது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை, ௨௦௧௯ - ௨௦ கல்வியாண்டு முதல், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, விருப்ப தேர்வு முறையில் சேர்க்க, முடிவு செய்யப்பட்டது.யோகா மற்றும் குழந்தை பருவ பராமரிப்பு கல்வி பாடங்களை சேர்ப்பது குறித்து, ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment