Saturday, April 6, 2019

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது.

கடந்த ஒரு வாரமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் விண்ணப்பிக்க மிகவும் சிக்கல் இருந்ததாகவும், சில இடங்களில் இணையதளம் முடங்கி இருந்ததாகவும் விண்ணப்பதாரர்கள் புகார் கூறினார்கள். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்தனர்.

அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து இருக்கிறது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி முதல் 5-ந்தேதி(நேற்று) பிற்பகல் 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் கோரி தொடர்ந்து முறையீடுகள் பெறப்பட்டு வருவதால் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 12-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment