புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் உடனுக்குடன்
பதிவேற்ற, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள், ஆசிரியர்கள் 'பயோடேட்டா', பள்ளிகளின் 'புரோபைல்', பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ்), 2012 முதல், பதிவு செய்யப்படுகிறது. இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்குதல், 'டிஜிட்டல்' மாற்றுச்சான்றிதழ், பாடப்புத்தகம், இலவச நலத்திட்ட பொருட்கள், புதிய ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 95 சதவீதமும், தனியார் பள்ளிகளில், 65 சதவீதமும் பணிகள் முடிந்துள்ளன.
'எமிஸ்' பணிகள் குறித்து பள்ளிகளில் நேரிடையாக சென்று, அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை வேகமெடுத்து வரும் நிலையில், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்யப்படாத மாணவர் சேர்க்கை எடுத்துக் கொள்ளப்படாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை, உடனுக்குடன், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment