அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை
உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் இதுவரை பள்ளிகளில் உள்ள பதிவேடுகளில் தினசரி கையெழுத்து போட்டு வந்தனர். தற்போது, பள்ளி திறக்கப்பட்ட நாள் முதல் கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறைக்கு மாற்றப்பட்டது.
பள்ளிக்கு வருகை புரியும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போதும் ஆசிரியர்கள் கை ரேகைகளை பதிவு செய்ய வேண்டும். இல்லை எனில் விடுமுறை எடுத்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் எனவும், 3 நாள் தாமதமாக வந்தால் ஒருநாள் ஆப்சென்ட் போடப்படும், 6 நாட்கள் தாமதமாக வந்தால் ஆப்சென்ட்டோடு மெமோவும் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு காலை 8.30 மணிக்கே வர வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்ப்யூட்டரில் தங்கள் ஆதார் எண்களில் கடைசி எட்டு எண்களை பதிவு செய்து பயோமெட்ரிக்கில் கைரேகை பதிவிடுகின்றனர்.
இதில் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதால் ஒருவர் தன் வருகையை பதிவு செய்ய 5 நிமிடங்கள் ஆகிறது.சிலர் பலமுறை முயற்சித்தால் தான் பதிவிட முடிகிறது. காலை 9.15 மணிக்குள் பதிவு செய்துவிட வேண்டும். 9.16க்கு பதிவு செய்தால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு மூன்று சிவப்பு பெற்றவர்களுக்கு ஒரு நாள் ஆப்சென்ட் வழங்கும் வகையில் பயோ மெட்ரிக் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆசிரியர்கள் காலையிலேயே பதைபதைப்போடு வரிசையில் காத்திருந்து தங்கள் வருகையை பதிவு செய்கின்றனர். இது போல் பள்ளி முடிந்ததும் பயோ மெட்ரிக்கில் கைரேகை வைத்து விட்டு பள்ளியை விட்டு வெளியே செல்ல மாலை 6 மணியாகி விடுகிறது. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பலரின் கைரேகைகள் ஒத்து வராததால் அவர்கள் தங்கள் ஆதாரில் கைரேகையை சரி செய்து வருமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் விடுப்பு போட்டு, ஆதார் அட்டையுடன் அலைந்து கொண்டுள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில் நவீன தொழில்நுட்பங்கள் உள்ள நிலையில் பயோமெட்ரிக் முறையை எளிமைப் படுத்திட வேண்டும். இந்த முறையில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். குறிப்பாக ஆன் டூட்டிக்கு வேறு பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் எப்படி தங்கள் வருகையை பதிவிடுவது என்பது தெளிவாக தெரிவிக்கப்பட வில்லை என்றனர்.

No comments:
Post a Comment