தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ள 1,848 தொடக்கப்பள்ளிகளை மூட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி துறையின் கீழ் 30 ஆயிரத்து 597 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால், ஆங்கில வழிக்கல்வி மோகத்தால் கிராமப்புற குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் சில பள்ளிகள் 10 க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகள் நடப்பதாக கண்டறிந்துள்ளனர். இங்கு தலா ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணிபுரிகின்றனர்.
மாணவர் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள 1,848 தொடக்க பள்ளிகளை அரசு கண்டறிந்துள்ளது. இவற்றை மூடிவிட்டு அங்கிருக்கும் தலைமை ஆசிரியர், ஆசிரியர், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் விபரம் சேகரிப்பு :
தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 10 க்கும் குறைவான மாணவர் உள்ள தொடக்க பள்ளி, அருகில் உள்ள பள்ளி விபரம், துாரம், குறுக்கே ஆறு, தேசிய சாலை, ரயில் தண்டவாளங்கள் உள்ளனவா உள்ளிட்ட விபரம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கடைசியாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை பணியிறக்கம் செய்து இடைநிலை ஆசிரியராக நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, என்றார்.
Dinamalar news

No comments:
Post a Comment