''கிராமப்புற மாணவ - மாணவியருக்கு, கர்நாடக இசை, பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலைகள் குறித்து, இணையம் வழியே, பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், பாண்டியராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - பூங்கோதை: தமிழக கிராமங்களில் உள்ள, மாணவ - மாணவியருக்கு, கர்நாடக இசை, பரதநாட்டியம் போன்ற கலைகளில், பயிற்சி அளித்து ஊக்குவிக்க, அரசு முன் வருமா? இந்த கலைகளை, அனைத்து தரப்பினரும் கற்க, இசைப் பள்ளிகளை, கருணாநிதி துவக்கினார். மேலை நாடுகளில் சிறிய வயதிலேயே, கலைகளை கற்றுத்தருகின்றனர். அதேபோல், தமிழகத்திலும் கற்றுத்தர வேண்டும்; கிராமிய கலைகளையும் கற்றுத்தர வேண்டும்.
அமைச்சர் பாண்டியராஜன்:தமிழகத்தில், இசைக் கல்லுாரிகள், இசைப்பள்ளிகள் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், கர்நாடக இசை மற்றும் தமிழ் இசை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜவகர் ஊரக சிறுவர் பள்ளி துவக்கப்பட்டது. இது, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
அனைத்து தரப்பு மாணவர்களும், அனைத்து கலைகளையும் கற்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு இணைய வழியில், கலைகளை கற்றுத் தர, நடவடிக்கை எடுத்து வருகிறோம். 'இல்லந்தோறும் இணையம்' திட்டம் அமலுக்கு வந்ததும், செயல்படுத்தப்படும். பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'கல்வி' தொலைக்காட்சி துவக்கப்பட உள்ளது. அதன் வழியே, கலைகளை கற்றுத் தரவும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' வழங்கப்படுவதால், அவர்கள் இணையம் வழியே, கலைகளை கற்பது எளிதாகும். இசைப் பள்ளிகளை கருணாநிதி துவக்கி இருந்தாலும், அவற்றை ஒருங்கிணைத்து, பல்கலையை உருவாக்கியது ஜெயலலிதா தான். இவ்வாறு, விவாதம் நடந்தது.

No comments:
Post a Comment