Wednesday, July 17, 2019

ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்களுக்கு ஆன்லைன்  மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில்
ஆசிரியர்  தேர்வு வாரியம் வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த மனுவில், கடந்த ஜூன் 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது.

கணினி  ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆன் லைன் மூலம் தேர்வு நடத்தலாம், மற்ற ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி இல்லாத காரணத்தால் ஆன்லைன் தேர்வு என்பது ஏற்புடையதாக இருக்காது. ஆன் லைன் தேர்வு நடத்தப்பட்டால் கணினி தெரியாதவர்கள் பல ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகும். எனவே ஆன்லைன் தேர்வை ரத்து செய்து விட்டு, எழுத்து தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்  கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், இந்த வழக்கு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 24 ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.


No comments:

Post a Comment