Saturday, August 10, 2019

ஆசிரியர்களை வாட்டி வதைக்கும் '53'

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 53 வகையான ஆவணங்களை தயாரிக்க கல்வித் துறை நிர்ப்பந்திக்கிறது. 

இதனால் கற்பித்தல் பணி சவாலாக மாறியுள்ளது என ஆசிரியர்கள்

ஆதங்கப்படுகின்றனர்.தமிழகத்தில் உள்ள 27,895 ஆரம்பப்பள்ளிகள், 9,134 நடுநிலை பள்ளிகளில் 28 லட்சம் மாணவர்கள், 1.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 70 சதவீத ஆரம்பப்பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் உள்ளனர். ஒன்று முதல் ஐந்து வகுப்புகளையும் இருவரே கவனிக்க வேண்டும்; 23 பாடங்களையும் நடத்த வேண்டும். புது பாடத்திட்டத்தில் 'கியூ.ஆர்., கோடு' பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உள்ளதால் அவற்றை அலைபேசி உதவியுடன் கற்பிக்க அதிக நேரம் தேவைப் படுகிறது. இதுதவிர பாடங்களும் அதிகம் உள்ளன.

இதனால் மாணவர்களின் தனித் திறமைக்கு ஏற்ற புதுமையான கற்பித்தலை மேற்கொள்வதில் ஆசிரியர்களுக்கு சிரமம் உள்ளது. இதில் ஆவணங்கள் தயாரிப்பு, பராமரிப்பு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது: ஆவணங்கள் தயாரித்தாலே போதும் என்ற மனநிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். கற்பித்தல் பணியில் கவனம் செலுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்கியுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு எவ்வளவு தேர்ச்சி அதிகரித்துள்ளது என்ற புள்ளி விவரத்தில் மட்டும் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். எங்களின் பணிச்சுமையை பார்ப்பதில்லை.

உதயச்சந்திரன் செயலராக இருந்தபோது ஆசிரியரை ஆவணங்கள் தயாரிப்பில் இருந்து முழுவதுமாக விடுவித்து, கற்பித்தல் பணியில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுத்தார். தற்போது அதற்கு மாறான சூழ்நிலை உள்ளதால் மாணவர் கல்வித்தரம் கேள்விக்குறியாகும், என்றனர்.

No comments:

Post a Comment