Thursday, August 22, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வில் 99 சதவீதம் பேர் 'பெயில்'

தமிழகத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 99 சதவீதம் பேர் 'பெயில்' ஆகியுள்ளனர். ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர் குறைந்தபட்ச பாட அறிவு கூட இல்லாமல் இருப்பது பள்ளி கல்வித் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை
சட்டத்தின்படி பள்ளி ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'டெட்' எனப்படும் இந்த தேர்வு தமிழகத்தில் 2011ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்பட்டது.மொத்தம் ஆறு லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 1.62 லட்சம் பேர் முதல் தாள் தேர்வு எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவில் வெளியாகின. இதில் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகத்தின் அடிப்படையில் தான் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான தேர்வில் முன்னேறிய பிரிவினர் 90 மதிப்பெண்ணும்; மற்றவர்கள் 82 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும்.தேர்வு முடிவின்படி ஒருவர் மட்டுமே அதிகபட்சமாக 90 மதிப்பெண் பெற்றுள்ளார். 1 மதிப்பெண் கூட எடுக்க முடியாத ஒருவரும் இதில் உள்ளார்.மொத்தத்தில் 843 பேர் மட்டுமே 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.நுழைவு தேர்வுகள் 'ஸ்மார்ட்' வகுப்பு போட்டி தேர்வுகள் என எதிர்காலத்தில் மிகவும் சவாலான போட்டியை மாணவர்கள் சந்திக்க உள்ள நிலையில் அவர்களுக்கு பாடம் நடத்த திறமையான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.ஆனால் ஆசிரியர் பணிக்கு வர விரும்புவோர் எட்டாம் வகுப்பு பாடங்களை கூட சரியாக படிக்காமல் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment