பள்ளி வகுப்பறையில் ஆசிரியருக்கு மாணவர் 'பளார்' விட்டதால், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி, பெற்றோர் ஆசிரியர் சங்க
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், ஆதமங்கலம் புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் இரு தரப்பினரிடையே, கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது. இதில், ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இப்பள்ளியில், கணினி ஆசிரியர் பூபதி, 38, என்பவர் நேற்று முன்தினம் மாலை, பிளஸ் 1 வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, மாணவர் ஒருவர் வகுப்பறையில் நாய், பூனை போல் 'மிமிக்ரி' செய்தார். ஆசிரியர் பூபதி, மாணவனை அழைத்து கண்டித்தார்.
அப்போது திடீரென மாணவன், ஆசிரியர் கன்னத்தில், அறைந்தார். அதிர்ச்சியடைந்த ஆசிரியர், சக ஆசிரியர்களிடம் கூறினார். பின்னர், இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அண்ணாதுரையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்க முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆசிரியரை தாக்கிய மாணவன் மீது, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மூலம், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment