மாற்றுமுறை ஆவண சட்டப்படி அறிவிக்கப்பட்ட விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
௨௦௧௫ ஜூலை ௨௭ல் மறைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூலை ௩௦ம் தேதியை பொது விடுமுறையாக அரசு அறிவித்தது. மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதன்படி பொது மற்றும் முதல் 'ஷிப்ட்'டில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளியில் உள்ள 'பைமெட்டல் பேரிங்' நிறுவனம் ஊதியத்துடன் விடுமுறை வழங்கியது. இரண்டாவது மூன்றாவது ஷிப்ட்டில் உள்ள தொழிலாளர்களை பணியாற்றும்படி உத்தரவிட்டது.இதையடுத்து அவர்களுக்கும் விடுமுறை வழங்கும்படி தொழிற்சங்க நிர்வாகிகள் கோரினர். அதற்கு நிர்வாகம் வார விடுமுறையில் அவர்கள் பணியாற்றினால் ௩௦ம் தேதி விடுமுறை வழங்குவதாக தெரிவித்தது. இதை தொழிற்சங்கம் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து இரண்டு மூன்றாவது ஷிப்ட் தொழிலாளர்கள் ௪௭ பேர் ௩௦ம் தேதி பணிக்கு வரவில்லை.வார விடுமுறையிலும் அவர்கள் பணிக்கு வரவில்லை. அதனால் பணிக்கு வராத நாளுக்கு சம்பளம் கிடையாது என நிர்வாகம் அறிவித்தது. இந்தப் பிரச்னை தொழிலாளர் நல நீதிமன்றத்துக்கு சென்றது. பணிக்கு வராத நாளுக்கு சம்பளம் வழங்கும்படி தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பைமெட்டல் பேரிங் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் அரசு அறிவிக்கும் விடுமுறை தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது. வார விடுமுறையில் பணியாற்ற ஒப்புக் கொண்டால் ௩௦ம் தேதி விடுமுறை வழங்குவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.தொழிற்சாலை நிர்வாகம் வழங்கிய நிபந்தனை சலுகையை தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் பணிபுரியாத நாளுக்கு ஊதியம் கோர அவர்களுக்கு உரிமை இல்லை. 'பணி இல்லை; சம்பளம் இல்லை' என்ற கொள்கை இதற்கும் பொருந்தும். எனவே தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment