கிராமம் மற்றும் நகர்ப்புற பள்ளிக்குழந்தைகளை இணைக்கும் பள்ளி பரிமாற்றத்திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்துவதில்
தாமதமாகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கிராமம் மற்றும் நகரங்களிலும் செயல்படுகிறது. வெவ்வேறு விதமான சூழலில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அனைத்துச்சூழல் கல்வி குறித்தும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக பள்ளி பரிமாற்றத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் நகரப்பள்ளிக்கும், நகரப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கிராமப்புற பள்ளிகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் அனுப்பப்படுகின்றனர்.அந்தந்த பள்ளிகளில் உள்ள கல்வி முறை, தொழில்நுட்ப வசதி, மாணவர்களுக்கான தனித்திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், இணை செயல்பாடுகள், ஆசிரியர்களின் கற்பித்தல் முறை உட்பட அனைத்தும், மாணவர்களுக்கு அந்த பள்ளி ஆசிரியர்கள் விளக்குகின்றனர்.ஒவ்வொரு கல்வியாண்டிலும், நான்கு முறை, இவ்வாறு மாணவர்கள், பள்ளிகளுக்கு மாற்றி அனுப்பப்படுகின்றனர்.
கல்வியாண்டின் துவக்கத்தில் எந்தெந்த பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு புதிய அனுபவமாக இருப்பதால், இத்திட்டம் பள்ளிகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பாண்டில், இத்திட்டம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.நடப்பாண்டில் இத்திட்டத்தில் பயன்பெறும் பள்ளிகள் குறித்து, விரைவில் அறிவிக்க வேண்டுமென, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:
Post a Comment