இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு செப் 27 முதல் 29 வரை வரை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெற்றது. இதில் மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 594 பட்டதாரிகள் முதல்முறையாக கணினிவழியில் தேர்வை எழுதினர்.
தேர்வு முடிவுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பாடங்கள் வாரியாக மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், முதுநிலை ஆசிரியர் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 3,824 பேர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
No comments:
Post a Comment