Tuesday, December 10, 2019

CBSE பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்திலோ 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடுமாநில அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. G.O attached

Click here to download the G.O      

2017-2018 ஆம் கல்வியாண்டுக்கு முன் 11 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் 12 ஆம்
வகுப்பு பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், தேர்வை எழுதும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடித் தனித்தேர்வர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பின்னரே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment