ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் அரசியல் கட்சியினர் பங்கேற்ற மனிதசங்கிலியில் பள்ளி மாணவிகளை பங்கேற்க செய்த திரு இருதய பள்ளி ஆசிரியைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.குடியுரிமை சட்டதிருத்த
சட்டத்தை கண்டித்து நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த மனிதசங்கிலியில் திருஇருதய பெண்கள் பள்ளி மாணவிகளுடன் ஆசிரியைகளும் பங்கேற்றனர்.இதற்கு ஹிந்து முன்னணி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நேற்று ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., கட்சியினர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட கல்வி அலுவலர் ஸ்ரீனிவாசனிடம் மனு அளித்தனர்.இந்நிலையில் பள்ளியில் நேற்று தாசில்தார் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய்த்துறையினரும், பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், தலைமையாசிரியை வசந்தி மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் மாவட்ட கல்வி அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான கல்வித்துறை அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.பின்னர் வி.ஏ.ஓ., வேல்ராஜ் புகாரில் வசந்தி, முத்துசெல்வி மற்றும் திருஇருதய பெண்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலைபள்ளி ஆசிரியைகள் மீது, பள்ளி மாணவிகளை மத உணர்வுக்கு எதிராக திசைதிருப்பி போராட்டத்தில் பங்கேற்க செய்ததாக இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment