Tuesday, February 11, 2020

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன ஆணை

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான, 1,503 பேருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 2019 ஜூன், 12ல், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டது. தகுதியான நபர்களிடம், விண்ணப்பம் பெறப்பட்டு, செப்டம்பர், 27 முதல், 29 வரை, தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட, 1,503 பேருக்கு, இரு நாட்களாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வி மேலாண்மை தகவல் மையம் வழியே, கலந்தாய்வு நடத்தினர்.
அதன் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட, 1,503 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, நேற்று முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார். அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் தீரஜ்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment