Thursday, July 2, 2020

'இன்ஸ்பையர்' விருது மாணவர்களுக்கு அழைப்பு

மத்திய அரசின், நவீனஅறிவியல்கண்டுபிடிப்புக்கான விருதுபெற விண்ணப்பிக்குமாறு,பள்ளி மாணவர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில்,ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில்,
நவீன கண்டுபிடிப்புக்கானவிருதுகள் வழங்கப்படும்.இதற்கு, பள்ளி மாணவர்களின்கண்டுபிடிப்புகள்காட்சிப்படுத்தப்படும்.இந்தஆண்டு, கொரோனா பிரச்னைஉள்ளதால், இன்னும் பள்ளிகள்திறக்கப்படவில்லை. எனவே,நேரடியாக அறிவியல்கண்காட்சி நடத்தமுடியாதநிலை உள்ளது.இந்நிலையில்,அறிவியல்கண்டுபிடிப்புக்கானவிருதுக்கு,மாணவர்களின்எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருதுவழங்க, மத்திய அறிவியல்தொழில்நுட்பத் துறை முடிவுசெய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்குஅனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும்மற்றும் தனியார் சுயநிதிபள்ளிகளில், ஆறு முதல், 10ம்வகுப்பு வரை படிக்கும்மாணவர்கள், இந்த போட்டியில்பங்கேற்கலாம். புதியகண்டுபிடிப்புகள் குறித்த,தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.inஎன்ற, இணையதளத்தில்,செப்., 30க்குள் பதிவு செய்யவேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்திஉட்பட, 22 மொழிகளில்,ஏதாவது ஒன்றில்,கண்டுபிடிப்பு குறித்தகட்டுரையை அனுப்பலாம். ஒருலட்சம் சிறந்த கண்டுபிடிப்புகட்டுரைகளுக்கு, தலா, 10ஆயிரம் ரூபாய் பரிசாகவழங்கப்படும்.இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment