Saturday, June 24, 2017

புதிய ஸ்மார்ட் கார்டு பெறுவது எப்படி? முதலில் இதைப் படியுங்கள்.

ரேஷன் கார்டு அல்லது திருத்தப்பட்ட குடும்ப அட்டையை, - சேவை மையம் மூலம் பெற்றுக்கொள்ள எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற முழு விபரத்தையும் தமிழ்நாடு சிவில் சப்ளை  துறை வெளியிட்டுள்ளது.


புதிய ரேஷன் கார்டுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது ?

புதிய ரேஷன் கார்டுக்கு  விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்கு www.tnpds.gov.in என்ற இணையதளத்திலோ, TNEPDS என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலமோ அல்லது - சேவை மையங்கள் மூலமோ விண்ணப்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, விசாரணை முடிந்து, செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ்  வரும் வரை காத்திருக்க வேண்டும்.
செல்போனில் எஸ்எம்எஸ்  வந்தவுடன், அவற்றை - சேவை மையத்தில் காண்பித்து, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையோ அல்லது திருத்தப்பட்ட ஸ்மார்ட் குடும்ப அட்டையோ பெற்றுக் கொள்ளலாம்.

பெயர் சேர்த்தல் எப்படி?
ஐந்து வயதுக்கு மேற்பட்ட நபர்களை குடும்ப அட்டையில் சேர்க்க, ஆதார் அட்டையையும், பிறப்பு சான்றிதழையும் , நியாய விலை கடையில் உள்ள பி..எஸ்., இயந்திரம் மூலமாக இணைக்க வேண்டும்.
வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் தந்தவுடன், செல்போனுக்கு வரும்  எஸ்எம்எஸ்  மூலம், - சேவை மையத்தில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை பெறலாம்.

முகவரி மாற்ற என்ன ஆவணம் தேவை?
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, பதிவு செய்யும் முகவரியும், இணைக்கப்படும் ஆவணத்தில் உள்ள முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும். முகவரி மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், TSO  மூலம் நியாயவிலை கடை ஒதுக்கீடு செய்யப்படும்.
முகவரி மாற்றம் செய்யும்போது, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, எரிவாயு நுகர்வோர் அட்டை, வரி ரசீது, வாடகை ஒப்பந்தம், குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம், வீடு ஆவணம், மின்சார ரசீது, தொலைபேசி ரசீது, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, வீட்டு வசதி வாரிய ஆவணங்கள், தபால் அடையாள அட்டைஆகியவற்றில் ஒன்றை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment