''தாமதமாக வருமான வரி செலுத்தினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என, வருமான வரித்துறை முதன்மை ஆணையர்யஷ்வந்த் சவான் கூறினார்.சென்னையில் நடந்த
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:வருமான வரி செலுத்துபவர்களால்,தொழில், வீட்டு, கல்வி, வாகன கடன் எளிதில் பெற முடியும். நாட்டின் வளர்ச்சிக்கு உதவமுடியும்.ஐந்து லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் பெறுவோர், ஆக., 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஐந்து லட்சத்திற்கு மேல், ஆண்டு வருமானம் பெறுவோர், டிச., 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவேண்டும். இல்லாவிட்டால், 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வியாபாரிகள் முறையாக வருமான வரிசெலுத்தினால், அபராதம் கட்டுவதில் இருந்தும், வழக்கில் இருந்தும் தப்பிக்கலாம்.வருமான வரி செலுத்துவோர், ஒரு நபருக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ரொக்கமாக கொடுக்கக் கூடாது. நன்கொடையாக, 2,000 ரூபாய்க்கு மேல் வழங்குவோர், காசோலையாக மட்டுமே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment