உயர்கல்வித் துறையில் எழுந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், துறைரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர்கல்வி துறை செயலராக, ஒன்றரை ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்த, சுனில் பாலிவால், இத்துறையில், பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்தார். ஆனால், அவரது பணிக் காலத்தில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் நிர்வாகத்தில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
சமீபத்தில், அவர், தொழிலாளர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய, மங்கத்ராம் சர்மா, புதிய உயர் கல்வி செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.இதையடுத்து, இரண்டு ஆண்டுகளாக எழுந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடு பிரச்னைகள் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தக் கோரி, பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் தரப்பினர், உயர்கல்வி துறைக்கும், கவர்னர் அலுவலகத்துக்கும், கடிதம் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
மேலும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வழியாகவும், உயர்கல்வி துறையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து, தமிழக உளவுத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரும், ரகசிய விசாரணையை துவக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.சில முக்கிய பிரச்னைகள் குறித்து, முதலில் விசாரித்து, அவற்றில் உண்மை இருந்தால், லஞ்ச ஒழிப்பு துறை வழியாக நடவடிக்கை மேற்கொள்ள, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தலைமை செயலரின் அனுமதியுடன், துறை ரீதியான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை தேர்வு துறை விவகாரம் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவர்களிடம், பணம் பெற்று, மதிப்பெண் வழங்கிய, தேர்வு துறை அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள், வழக்கில் சிக்கியுள்ளனர்.
மேலும், அண்ணா பல்கலையின் தேர்வு சான்றிதழை அச்சடிக்க, 62 கோடி ரூபாய்க்கு, 'டெண்டர்' விடப்பட்டது. அதில், விதிகள் மீறப்பட்டதாக எழுந்த புகார் குறித்தும், விசாரணை நடத்தப்பட உள்ளது.கோவை, பாரதியார் பல்கலையில், முன்னாள் துணை வேந்தர், கணபதி, பதவியில் இருந்தபோதும், அதற்கு பின்னும் நடந்த நியமனங்கள் குறித்து, விசாரணை நடத்தப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், உயர்கல்வி அதிகாரிகளின் பெயரில், சிபாரிசு செய்யப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்துள்ளது குறித்தும், விசாரணை நடத்த உள்ளனர். மதுரை, காமராஜர் பல்கலைக்கு துணை வேந்தராக, செல்லதுரை தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும், அவரை தேர்வு செய்ததில், உயர் கல்வி அதிகாரிகள் தலையிட்டனரா; தேடல் குழு உறுப்பினர்களை நியமித்த முறையில், விதிகள் பின்பற்றப்பட்டதா என, விசாரணை நடக்க உள்ளது.திருச்சி, பாரதிதாசன் பல்கலையில், துணை வேந்தர் இல்லாத காலத்தில், உயர்கல்வி அதிகாரி களின் நிர்வாகத்தின்போது, பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.இந்த நியமனம், அவசரமாக மேற்கொள்ளப்பட்டது ஏன் என்ற, கேள்வி எழுப்பப்பட்டது.
அதுபற்றியும், கல்லுாரி கல்வி துறையில், இயக்குனர், இணை இயக்குனர்கள், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோரின் நியமனங்கள் மற்றும் இடமாறுதல்கள் குறித்தும், விசாரணை நடத்தப்படும் என, உயர் கல்வி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கவர்னர் கண்காணிப்பு
உயர்கல்வித் துறையில் முறைகேடு தொடர்பான விசாரணையில், அடிப்படை ஆதாரங்கள் கிடைத்தால், விதிமீறிய நியமனங்கள் மற்றும் இடமாறுதல்களை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்டோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், உயர் கல்வி துறையின் உயர் பொறுப்பில் உள்ள, கவர்னர் மற்றும் கவர்னர் அலுவலக கண்காணிப்பில் நடக்கும் என, தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment