Sunday, September 30, 2018

சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை

பிளாஸ்டிக் பயன்பாடு தடை உத்தரவை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவர்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் தடை திட்டம், செப்., 15 முதல், பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.அனைத்து மாவட்ட பள்ளி கல்வி அலுவலகங்கள், அரசு, அரசு உதவி, சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., என, அனைத்து பள்ளிகளும், இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதி செய்வதுடன், அனைத்து பள்ளிகளிலும், 'பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடில்லாத பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அலட்சியம்!அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டம், இன்னும் அமலுக்கு வரவில்லை. இதுகுறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் இருந்து, எந்த உத்தரவும் வரவில்லை என, இன்ஜி., கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.ஆனால், பல நிகர்நிலை பல்கலைகளும், சுயநிதி கல்லுாரிகளும், தாங்களாகவே, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன.

No comments:

Post a Comment