சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட இணைப்பு அந்தஸ்து பெற, இடைத் தரகர்களை அணுகவோ, சிபாரிசு செய்யவோ வேண்டாம்' என, தனியார் பள்ளிகளுக்கு, வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசின், 'நீட்'
நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு போன்றவற்றில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட மாணவர்கள் தான், அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், நாடு முழுவதும், பல தனியார் பள்ளி கள், மாநில பாடத்திட்டத் தில் இருந்து விலகி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சேர, நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.இதன்படி, அடுத்த கல்வியாண்டில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அடிப்படையில், பள்ளிகளை நடத்த, ஆயிரக்கணக்கான பள்ளிகள், சி.பி.எஸ்.இ., வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளன.விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளில், கள ஆய்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு கள் முடிந்த பின், சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும். இந்த செயல்பாடுகள் முடிய, சில மாதங்கள் ஆகும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், தங்களுக்கு, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என அச்சம்அடைந்து, இடைத்தரகர்கள் வழியாக, தங்களைத் தொடர்பு கொள்வதாக, சி.பி.எஸ்.இ., வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.பல பள்ளிகள், தங்களுக்கு தெரிந்த அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளின் வழியாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்து, சி.பி.எஸ்.இ.,க்கு நெருக்கடி கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில் சி.பி.எஸ்.இ., வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாடத்திட்ட இணைப்பை பெற, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அவற்றை பின்பற்றி, இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும். தற்போது, விண்ணப்ப பரிசீலனை நடந்து வருகிறது. இதற்கு, சில மாதங்கள் தேவை. எனவே, அவசரமாக, தங்களுக்கு இணைப்பு அந்தஸ்து வேண்டும் என, இடைத்தரகர்கள் வாயிலாகவோ, வேறு யார் வழியாகவோ, வாரியத்தை தொடர்பு கொள்ள வேண்டாம். அது போன்ற சிபாரிசுகளை, சி.பி.எஸ்.இ., ஏற்றுக் கொள்ளாது என்பதை, பள்ளி நிர்வாகிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இணைப்பு அந்தஸ்து பெற்று தருவதாக, இடைத்தரகர்கள் யாரும் அணுகினால், வாரிய அலுவலகத்திற்கு புகார் அனுப்பலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment