Friday, September 21, 2018

அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் - CEO அதிரடி உத்தரவு

அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு !!



சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ளவர் கணேஷ்மூர்த்தி, இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன், கரூர் மாவட்டத்திலிருந்து, மாறுதலில் சேலம் வந்தார். பணியில் சேர்ந்தது முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின் போது காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போடுவதோடு, அடுத்தநாளே சம்பளம் பிடித்தம் செய்ததற்கான ஆணையை வழங்கி விடுகிறார். மேலும் காலை, 9:15 மணிக்குள், பள்ளியின் வருகை பதிவை வழங்காத பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, '17 ஏ' மெமோ வழங்குகிறார். இதனால், சேலம் மாவட்ட கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment