Saturday, October 6, 2018

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில் குழப்பம் தொலைபேசி எண் அறிவித்தது கல்வித்துறை

புதுச்சேரி, பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பதில் இரண்டு நாட்கள் குழப்பமான சூழல் நிலவியதால், பெற்றோர் நேரடியாக கல்வித்துறையை தொடர்பு கொள்ளலாம் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் கடும் மழை பெய்தது. இதனால், பள்ளிக்கு விடுமறை விடப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலை 8:00 மணி வரை பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை மழையில் நனைந்தபடி பள்ளிக்கு அழைத்து சென்றனர்.பின்னர் மழை நீடித்ததால், காலை 8.10 மணிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இதனால் மாணவர்கள் மீண்டும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்றும் மழை நீடித்ததால், விடுமுறை விடப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால், மழை கடுமையாக இல்லாததால் விடுமுறை அளிக்கப்படவில்லை.--இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், கல்வித்துறையை நேரடியாக தொலைபேசி மூலம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில் அமைக்கப்பட்டுள்ள 0413- 2207262 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment