புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி இருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியதற்கு 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.கூட்டமைப்பு
ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 4ல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பினர் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர், பணிக்கு வராமலோ இல்லை. அவர்களுக்குள்ள விடுப்பை பயன்படுத்தி கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். எனவே சம்பளம் பிடித்தம் செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.'நிதி நெருக்கடி இருப்பதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினம்' என முதல்வர் கூறி இருப்பது கண்டனத்திற்கு உரியது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 21 ஆயிரத்து 200 கோடி ரூபாய் எங்கு போனது என தெரியவில்லை. அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, இதற்காக குழுவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். அந்த குழு இதுவரை அறிக்கை கொடுக்கவில்லை. அக்., 28ல் உயர்மட்ட குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்வர், என்றார்

No comments:
Post a Comment