Saturday, October 20, 2018

தனியார் பள்ளிகளில், 'ஹவுஸ் புல்' : விஜயதசமி அட்மிஷன்: அரசு பள்ளிகளில், 'டல்'

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், விஜயதசமி மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்தது. அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, 'டல்' அடித்தது.நாடு முழுவதும், விஜயதசமி பண்டிகை, நேற்று,
கொண்டாடப்பட்டது. இந்த நாளில், ஹிந்துக்கள், தங்கள் வீட்டு குழந்தைகளை, முதன் முதலில் பள்ளியில் சேர்ப்பது, ஐதீகமாக உள்ளது. இதன்படி, 'பிளே ஸ்கூல்' எனப்படும், மழலையர் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்தது.தமிழகத்தில், பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு தொடக்கப் பள்ளிகளிலும், விஜயதசமி சேர்க்கை நடத்த, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி உத்தரவிட்டார். இந்தாண்டு, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்த நிலையில், விஜயதசமியை முன்னிட்டு, கூடுதல் மாணவர்களை சேர்த்து, எண்ணிக்கையை உயர்த்த, கல்வி துறை திட்டமிட்டது. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் நேற்று, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. தொடக்கப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பு ஆசிரியர் பணிக்கு வரவில்லை. விடுமுறை என்பதால், பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், உற்சாகமாக மாணவர் சேர்க்கையை நடத்தின. இதனால், தனியார் பள்ளிகள், தங்களுக்கான மாணவர் சேர்க்கை இலக்கை நேற்று எட்டின. பல மாணவர்கள், அங்கன்வாடிகளில் இருந்து, தனியார் பள்ளிகளுக்கு மாறியதாக, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment