''ஜாக்டோ - ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் வருவாய்துறை கிராம உதவியாளர்களும் (தலையாரிகள்) பங்கேற்பார்கள்,''என, அச்சங்க மாநில தலைவர் ஆர். ராஜசேகர் தெரிவித்தார்.
விருதுநகரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வருவாய்துறையில் 16,300 கிராம உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாட்களில் வாங்கும் ஒட்டு மொத்த சம்பளத்தில் 50 சதவீத பணத்தை மாத பென்ஷனாக வழங்க வேண்டும் என்பதுட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,5ல் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினோம். அதற்கு பின்னரும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.,31 முதல் நவ.,2 வரை தொடர் வேலை நிறுத்தம், 2019 ஜன., 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளோம். காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கஉள்ள ஜாக்டோ - ஜியோவிற்கு ஆதரவாக கிராம உதவியாளர்களும் போராட்டத்தில் இறங்குவர், என்றார்.

No comments:
Post a Comment