தமிழக உயர்கல்வி துறையில் தொடர்ந்து, ஊழல், முறைகேடு புகார்கள் எழும் நிலையில், ஒன்பது பல்கலைகளில், பதிவாளர் பதவி கூட நிரப்பப்படாமல், காலியாக உள்ளது.தமிழகத்தில், பள்ளி கல்வி
துறையின் நடவடிக்கைகள், நாளுக்கு நாள் மேம்பட்டு வருகின்றன.
ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு, நிர்வாக சீர்திருத்தம், ஸ்மார்ட் வகுப்பு, தேர்வு முறையில் சீர்திருத்தம், புதிய பாடத்திட்டம் என, பல்வேறு மாற்றங்களை, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மேற்கொண்டுள்ளார்.ஆனால், இதற்கு தலைகீழாக, ஊழல், முறைகேடு என, விதிமீறல்களின் புகலிடமாக, உயர்கல்வி துறை மாறியுள்ளது.துணைவேந்தர் பணி நியமனங்களில் ஏற்பட்ட குளறுபடி, தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு, பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு என, புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை, திறந்தநிலை பல்கலை, சட்ட பல்கலை, மீன்வள பல்கலை, திருவள்ளுவர் பல்கலை, பாரதியார், பெரியார், அண்ணாமலை, அண்ணா பல்கலை என, ஒன்பது பல்கலைகளில், பதிவாளர் பதவி நிரப்பப் படாமல், நீண்ட நாட்களாக காலியாக உள்ளன. இதனால், அவற்றில், பேராசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறியதாவது:தமிழக கல்லுாரிகள் அனைத்தும், பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில் செயல்படுகின்றன. கல்லுாரிகளின் பணி நியமனம் மற்றும் கல்வி தொடர்பான பணிகளை, சிண்டிகேட் அமைப்பு கண்காணிக்கிறது.அதேபோல, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின்நிர்வாக பணிகளை, துணைவேந்தரும், அவரை தொடர்ந்து, பதிவாளரும் மேற்கொள்கின்றனர்.ஆனால், பல பல்கலைகளில் பதிவாளர் பணியிடங்கள், மாதக் கணக்கில் காலியாக உள்ளன.
துணைவேந்தர்கள் அல்லது உயர்கல்வி துறை உயர் அதிகாரிகளின் செல்வாக்கு பெற்றவர்கள், பதிவாளருக்கான தற்காலிக பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதனால், பதிவாளர் பதவிக்கான முழு அதிகாரம் மறைமுகமாக பறிக்கப்பட்டு, பெயரளவில் பதிவாளர்கள் செயல்படும் நிலை உள்ளது.மேலும், பதிவாளர் இல்லாததால், துணைவேந்தர்களே ஒட்டு மொத்த அதிகாரத்தையும் எடுத்து கொள்ளும் நிலையும் உள்ளது.
பல்கலைகளின் வேந்த ரான, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், இதில் தலையிட்டு, பதிவாளர் பதவி காலியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment