Friday, November 30, 2018

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்துணவு சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு காரணமாக, 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: 

காலமுறை ஊதியம் பெறாத சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம கடை நிலை ஊழியர்கள், பணியிழந்த மக்கள் நலப்பணியாளர், டேங்க் ஆபரேட்டர், பம்ப் பிட்டர், கிராம நூலகர், கிராம கோயில் பூசாரி ஆகியோருக்கு காலமுறை ஊதியமும், குறைந்தபட்ச ஊதியமும் கிடைக்கும் வரை வேலை நிறுத்த ேபாராட்டம் தொடரும் என்ற உத்தரவாதம் போராட்ட குழுவிடம் இல்லை. கஜா புயல் பாதிப்பு போன்ற காரணங்களினாலும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது.

No comments:

Post a Comment