டிசம்பர் 4 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த அமைப்பினருடன் தமிழக அரசு வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை
நடத்துகிறது. இதில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே, வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா என்பது தெரிய வரும்.
நடத்துகிறது. இதில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே, வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா என்பது தெரிய வரும்.
2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அளிக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் அளிக்க வேண்டும் என்பன உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு ஊசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
No comments:
Post a Comment