'சீர்திருத்த இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, முறையான கல்வி வழங்கப்பட வேண்டும்' என, என்.சி.பி.சி.ஆர்., எனப்படும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன்
பரிந்துரைத்துள்ளது.இந்தியாவில், சீர்திருத்த இல்லங்களில் தங்கிஉள்ள குழந்தைகளுக்கு கிடைக்கும் தரமான கல்வி மற்றும் தொழில் கல்வி குறித்த அறிக்கையில், என்.சி.பி.சி.ஆர்., கூறியுள்ளதாவது:நாடு முழுவதும், 50 சீர்திருத்த இல்லங்களில், 2,691 குழந்தைகள் உள்ளனர். இவற்றில், 42 இல்லங்களில், குழந்தைகளின் கல்விக்கென தனி நிதி ஒதுக்கப்படுவதில்லை; இது, சட்ட விதிகளுக்கு முரணானது.பெரும்பாலான சீர்திருத்த இல்லங்கள், அரசால் நடத்தப்படுகின்றன. நான்கு இல்லங்களை, அரசு சாரா அமைப்புகள் நடத்துகின்றன.தவறுகள் செய்ததால், சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்பப்படும் குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்படுவது அவசியம்.'சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ், சீர்திருத்த இல்லங்களில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.'சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்பப்படும் குழந்தைகளுக்கு, கல்வி, திறன் மேம்பாடு, நடத்தை மேம்பாடு, உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்' என, சிறார் நீதி சட்டம் கூறுகிறது. இதன்படி, சீர்திருத்த இல்லங்களில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்.சீர்திருத்த இல்லங்களில் உள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர், பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்களாகவோ, பள்ளிக்கே செல்லாதவர்களாகவோ உள்ளனர்.பள்ளிக்கே செல்லாத குழந்தைகள், சீர்திருத்த இல்லங்களில் சேர்க்கப்பட்டால், அவர்களுக்கு முறைப்படி ஆலோசனைகள் வழங்கி, தேசிய திறந்த பள்ளிகள் மையத்தில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment