ஆசிரியர்களுக்கான கோரிக்கையை முன்னிறுத்தி, சிறை நிரப்பும் போராட்டம் நடத்த போவதாக, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்க பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் பொது செயலர், மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜாக்டோ -- ஜியோ கூட்டமைப்பில் உள்ள, இரண்டு பிரிவாக செயல்பட்ட சங்கங்களை இணைத்து, ஒரே அமைப்பாக வலுப்பெற்றுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற கோரி, தொடர் போராட்டம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, டிச., 4 முதல், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடத்தினாலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த, தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment