‘கஜா’ புயலால் பாதித்த மக்க ளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அரசு பள்ளி ஆசிரி யர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிரியர் அமைப்பு முதல்வருக்கு உறுதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் முதல்வருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆசிரியர் சங்கம் சார்பில் வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். புயல் பாதித்த பகுதிகளில் அரசு சார்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்பணியில் ஆசிரியர் களின் பங்களிப்பும் இருந் திடும் வகையில், வாழ்வா தாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு எங்கள் ஆசிரியர் அமைப்பு சார்பில் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளோம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள் கிறோம்.
இதுதொடர்பான அரசா ணையை பிறப்பிக்குமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment