வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை.
மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: தற்போதைய சட்டங்களின்படி, வருமான வரித் துறை வழங்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், பான் கார்டு பெறுவதற்கு, தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் மட்டும், தந்தையின் பெயரைக் குறிப்பிடாமல், தாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்; இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment