கழிவறைக்குள், ஆறு மணி நேரம் மாணவி தவித்த விவகாரத்தில், பள்ளி காவலாளி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, பஷீராபாத்தில் நகராட்சி பெண்கள் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 300 மாணவியர் படிக்கின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த, நதீம், 30, என்பவரது, ஐந்து வயது மகள், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு மாணவி கழிவறைக்குச் சென்றார்.இதை கவனிக்காத காவலாளி முருகேசன், 45, பள்ளி, கழிவறையை பூட்டிச் சென்றார். நீண்ட நேரமாக மாணவி வராததால், பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர். இரவு, 10:00 மணிக்கு, பள்ளியில் கதவு தட்டும் சத்தமும், மாணவியின் அழுகுரலும் கேட்டது.கதவை உடைத்து உள்ளே சென்ற ஊர் மக்கள் மாணவியை மீட்டனர்.இதைக்கண்டித்து மாணவியின் பெற்றோர், பொதுமக்கள், நேற்று காலை, 10:00 மணிக்கு, பள்ளியை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, ஆசிரியர்கள் உறுதியளித்ததால், 11:00 மணிக்கு அவர்கள் கலைந்து சென்றனர்.காவலாளி முருகேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

No comments:
Post a Comment