Sunday, December 23, 2018

இடமாறுதல் பெற பள்ளி ஆசிரியர்கள் இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
இதுகுறித்து பள்ளி கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைமை கல்வி அலுவலர்களுக்கு (சி.இ.ஓ). அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த ஜூன் மாதம் ஆன்லைன் கவுன்சிலிங் நடந்த பிறகு நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் இறுதி பட்டியலை தரும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்

எனவே இந்த பட்டியலை தாக்கல் செய்ய வேண்டியதுள்ளது. உண்மையான பட்டியலை அனுப்பாவிட்டால் குற்றச்சாட்டு எழும்.

மேல்நிலை கல்வி இணை இயக்குனர்கள் உத்தரவிடும் இடமாறுதல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட இறுதி பட்டியல், உங்கள் பார்வைக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால் அந்த பட்டியலை மட்டுமே செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த பட்டியலில் இல்லாமல் அளிக்கப்பட்டுள்ள இடமாறுதல்களை தனியாக குறிப்பிட வேண்டும். சமீபத்தில் நடந்த ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்கள் யாராவது இடமாறுதல் உத்தரவை பெற்று, பின்னர் குறுகிய இடைவெளியில் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டிருந்தால் அதை தனியாக குறிப்பிட வேண்டும்.

இனி ஆன்லைன்

தற்போது ஆசிரியர் இடமாறுதலுக்கான விண்ணப்பங்களை இ.எம்.ஐ.எஸ். என்ற இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே பணியிடமாற்றம் அனைத்தையும் ஆன்லைனில்தான் நடத்த வேண்டும்.

எனவே, நீங்கள் இதற்கான உங்களது ‘யூசர் ஐ.டி., பாஸ்வர்டு’ ஆகியவற்றை பெற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் பணியிடமாற்றத்துக்கு அதை பயன்படுத்த வேண்டும். 24-ந் தேதி பிற்பகல் 5 மணிக்குள் உங்கள் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment