Friday, January 4, 2019

'குரூப் - 1' தேர்வு 21ல், 'இன்டர்வியூ'

:'குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 21ல் நேர்முக தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


'குரூப் - 1' பதவியில் அடங்கிய, 85 காலியிடங்களை நிரப்ப, 2017 பிப்ரவரியில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2017 அக்., 13 முதல், 15 வரை, பிரதான தேர்வு நடந்தது. பிரதான தேர்வில், 176 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களின் விபரங்கள், 2018 டிச., 31ல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. நேர்முக தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, வரும், 21 முதல், 25 வரை, சென்னையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேர்முக தேர்வு நடக்க உள்ளது. இதற்கான தகவல்கள், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில் வழியாக, தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment