Tuesday, January 15, 2019

3,500 பள்ளிகள் இணைப்பு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக பள்ளி கல்வியில், சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், தற்போது முடுக்கி
விடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக, மாணவர் எண்ணிக்கை குறைந்த தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளுடனும், நடுநிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளுடனும் இணைக்கப்பட உள்ளன.இந்த வகையில், 3,500 பள்ளிகளை இணைத்து, அவற்றில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரே வளாகத்தில் வகுப்புகளை நடத்த, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இந்த இணைப்புக்கு, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலர், தாஸ் கூறியதாவது:தொடக்க பள்ளிகள் இணைப்பு என்பது, பள்ளிகளை மூடுவதற்கு சமமான நடவடிக்கை. மாநிலம் முழுவதும், 3,500 பள்ளிகளை இணைத்தால், ஆயிரக்கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும்.கிராம புறங்களின் பள்ளிகளின் எண்ணிக்கை குறையும். எனவே, தமிழக அரசு, இந்த முயற்சியை கைவிட வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரித்து, பள்ளிகளை தற்போதுள்ள நிலையில் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment