Wednesday, January 16, 2019

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்; மத்திய அரசு ஒப்புதல்

அரசு தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதனால் இவர்களுக்கு 7வது ஊதிய குழுவின் பலன்கள் நீட்டித்து வழங்கப்படுகிறது.  இதனை 2016 ஜனவரி 1ந்தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.  இதனால் அரசுக்கு ரூ.1,241.78 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

No comments:

Post a Comment