Tuesday, March 26, 2019

கணித வினாத்தாள்; மாணவர்கள் கதறல்

பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நேற்று கணித பாடத்துக்கான தேர்வு நடந்தது. வழக்கமாக, கணிதம் என்றாலே மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண் பெறுவர். இந்த ஆண்டு மாணவர்களும், அப்படி எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கணித வினாத்தாள் கடினமாக இருந்தது.பெரும்பாலான கேள்விகள் விடை அளிக்க முடியாத வகையில், மாணவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைத்தன. புத்தகத்தின் உள்பகுதி பாடங்களில் இருந்து வந்த கேள்விகள், சுற்றி வளைத்து கேட்கப்பட்டன. அதனால், தெரிந்த விடையானாலும், அதை எப்படி எழுதுவது என, தெரியாமல், மாணவர்கள் தவித்தனர். இது குறித்து, கணித ஆசிரியர்களும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து, கணித ஆசிரியர்கள் கூறியதாவது:குறைந்தது, 25 சதவீதம் கடினமான கேள்விகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு தேர்வில், 75 சதவீதம் கடினமான கேள்விகள் இடம் பெற்றுள்ளன. கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெறுவதே சந்தேகமாக உள்ளது. சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்கள், தங்களின் தேர்ச்சிக்காக தேர்ந்தெடுத்து படிக்கும், எந்த வினாவும், நேற்றைய தேர்வில் இடம் பெறவில்லை. அதனால், சராசரி மாணவர்களின் தேர்ச்சி குறைய வாய்ப்புள்ளதால், மாணவர்களுக்கு சமப்படுத்தும் மதிப்பெண் வழங்க வேண்டும். வினாத்தாள் தயாரிப்பவர்கள், மாணவர்களின் கல்வித் தரம், பயிற்றுவித்தல் முறையையும் மனதில் வைத்து, வினாத்தாளை தயாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment