Sunday, March 3, 2019

சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாட்டை சரிசெய்யப்படாததால் வேறு பணிக்கு மாறும் இடைநிலை ஆசிரியர்கள்!

2009  & TET ஆசிரியர்களின்ஒன்றியப்பொருப்பாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள்சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி பல்வேறுபோராட்டங்களில் பங்கெடுத்து அரசு நியாயமானகோரிக்கை என்பதை மட்டும் ஏற்றுக்கொண்டதேதவிர கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம்தாழ்த்தி வருவதால் 2009 மற்றும் TET ஆசிரியர்கள்அனைவரும் மன உலைச்சலில் இருப்பதனால் வேறுவேலையை தேடவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிஉள்ளனர்.*

*🔰அந்த வரிசையில் தற்போது விழுப்புரம் மாவட்டம்உளுந்தூர்பேட்டை பேட்டை ஒன்றியத்தை சார்ந்தஇடைநிலை ஆசிரியரும் உளுந்தூர்பேட்டை ஒன்றிய2009 & TET ஆசிரியர்களின்ஒன்றியப்பொருப்பாளருமாகிய வடகுறும்பூர்அரசுப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர்திரு.ஜெய்சங்கர் அவர்கள் பலதுறைகளில் வேலைதேட ஆரம்பித்தார்.*

*🔰தற்போது அவருக்கு காவல்துறையில்விரல்ரேகைப்பதிவு ஆய்வாளராக பணிஆணையைபெற்று இடைநிலை ஆசிரியர் பணியைதுறந்துள்ளார்.

நமது அரசு கோரிக்கையை நிறைவேற்றாமல்காலம் தாழ்த்துவதால் திறமையான இடைநிலை ஆசிரியர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.*

*🔰இது போன்ற சூழல் ஏற்படாமல் இருக்க 2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய  முரண்பாட்டுப்பிரச்சனையான சமவேலை சம ஊதியம் என்றநியாயமான கோரிக்கையை விரைவாகநிறைவேற்றி இடைநிலை ஆசிரியர்கள் வேறுதுறையை தேர்ந்தெடுப்பதை தடுக்கும் வகையில்விரைந்து நிறைவேற்றுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.*

*🔰சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக்கோரிக்கையை நிறைவேற்றி 21ஆயிரம் இடைநிலைஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவேண்டுமாய் நம் அரசினைகேட்டுக்கொள்கின்றோம்!*

*இப்படிக்கு*
*விழுப்புரம் மாவட்ட 2009 & TET ஆசிரியர்கள்ஒருங்கிணைப்புக்குழு*

No comments:

Post a Comment