Monday, April 1, 2019

ஆதாருடன், 'பான்' இணைக்க காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

ஆதாருடன், 'பான்' எனப்படும், வருமானவரி கணக்கு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

'அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ஆதார் எண்ணுடன், 'பான்' கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாருடன், பான் கார்டை இணைப்பதற்காக, அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், அவ்வப்போ நீட்டிக்கப்பட்டது.

ஐந்தாவது முறையாக, காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, 2019, மார்ச், 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்றுடன் இந்த கெடு முடிந்தது. இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்காக காலக்கெடு வரும், செப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment