வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் என, உயர் கல்வித் துறை உறுதிப்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், தமிழக அரசால் நடத்தப்படுகிறது.இதற்கு, அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் அடங்கிய, மாணவர் சேர்க்கை கமிட்டி சார்பில், அண்ணா பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அண்ணா பல்கலை பேராசிரியர்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் பாட வகுப்புகள் நடத்தும் சுமை அதிகம் உள்ளதாக, துணைவேந்தர், சுரப்பா அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தமிழக உயர்கல்வி துறையின் கீழ் உள்ள, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நேரடியாக நடத்தும் என, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அதை, உயர்கல்வி முதன்மை செயலர், மங்கத்ராம் சர்மா, மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment