Wednesday, May 8, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு தேர்வு தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 அரியர் பாடம் மற்றும் பிளஸ் 2, ஜூன் சிறப்பு தேர்வுக்கு, தத்கலில் விண்ணப்பிக்கலாம்.'ஆன்லைன்'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கு நடந்து முடிந்த, பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள், ஜூனில் நடக்கும் சிறப்பு தேர்வில் பங்கேற்கலாம். இந்த தேர்வுக்கு, ஏப்ரலில் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.இந்த அவகாசத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள், தத்கல் முறையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர்கள், தாங்கள், எந்த மாவட்டமோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வு சேவை மையத்திற்கு, நாளையும், நாளை மறுநாளும் நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

அதேபோல, மார்ச்சில் நடந்த, பிளஸ் 1 அரியர் பாடம் மற்றும் பிளஸ் 2 தேர்வில், பங்கேற்ற மாணவர்கள், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், ஜூன் சிறப்பு தேர்வில் பங்கேற்கலாம்.இதற்காக, தத்கல் சிறப்பு கட்டணம் அடிப்படையில், வரும், 13, 14ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.தனியார் இணையதள மையங்கள் வழியே விண்ணப்பிக்க முடியாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம்சேவை மையங்களின் விபரத்தை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment