தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இலவச
ஒதுக்கீட்டு இடங்களுக்காக அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை,எளிய மாணவ மாணவியர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அப்படி இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுகான கல்விக் கட்டணம் அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் இலவச ஒதுக்கீட்டு இடங்களுக்காக அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.
2018ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அரசால் வழங்கப்படும் ஒரு மாணவருக்கான கட்டணம் 11 ஆயிரத்து 719 ரூபாய் முதல் அதிகபட்சமாக 11 ஆயிரத்து 960 ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், தனியார் பள்ளிகளுக்கு 25 சதவிகித இலவச இடங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் நிதி குறைந்துள்ளது.
கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒரு மாணவருக்கான கட்டணம் என்னவாக இருக்குமோ அந்தத் தொகை தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தொகைக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 25 ஆயிரத்து 385 ரூபாய் முதல் 25 ஆயிரத்து 655 ரூபாய்வரை ஒரு மாணவருக்கான அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment